நாமக்கல், மார்ச் 20: கொங்கு மண்டலம் திமுக கூட்டணி கட்சியின் கோட்டை என்பதை நாடாளுமன்ற தேர்தல் முடிவு நிரூபிக்கும் என நாமக்கல்லில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ஈஸ்வரன் பேசினார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. ஒன்றிய திமுக செயலாளர் பழனிவேல் தலைமை வகித்தார். மாவட்ட திமுக பொறுப்பாளர் காந்திசெல்வன், திமுக கூட்டணி வேட்பாளர் சின்ராஜை அறிமுகம் செய்து வைத்தார். அவர் பேசுகையில், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளரை வெற்றிபெற வைப்போம். அதற்காக கட்சியினர் தீவிரமாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றார். கூட்டத்தில் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேசுகையில், தமிழகத்திலுள்ள அனைத்து நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். அதிமுகவின் கோட்டை என கொங்கு மண்டலத்தை அதிமுகவினர் கூறிவருகிறார்கள்.