வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி காஸ் சிலிண்டர்களில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர்

காஞ்சிபுரம், மார்ச் 20: காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கீழ்கதிர்பூரில் உள்ள தனியார் காஸ் ஏஜென்சி மூலம் வினியோகம் செய்யப்படும் சிலிண்டர்களில், மாவட்ட தேர்தல் அலுவலர் பொன்னையா, தேர்தல்  குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பொன்னையா, நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசு பஸ்கள், தனியார் கல்லூரி பஸ்கள், ஆட்டோக்கள் உள்பட அனைத்து வாகனங்களிலும் தேர்தல் குறித்த விழிப்புணர்வு  ஸ்டிக்கர்களை ஒட்டி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்கதிர்பூர் ஊராட்சியில் அமைந்துள்ள தனியார் காஸ் ஏஜென்சி மூலம் வினியோகம் செய்யப்படும் சிலிண்டர்களில்,  தேர்ர்தலை முன்னிட்டு பொது மக்கள் அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) அருண், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தர், காஞ்சிபுரம் சப் கலெக்டர் சரவணன், மகளிர் திட்ட இயக்குநர் சீனிவாசராவ், கலெக்டரின் நேர்முக உதவியாளர்  (பொது)  நாராயணன், காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் உள்பட பலர் கலந்து

கொண்டனர்,

Related Stories: