மூணாறு நகரில் உள்ள நவீன கழிப்பறைகளில் மின்சார வசதி இல்லை

மூணாறு, மார்ச் 19: மூணாறு நகரில் கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறை பல மாதங்களாகியும் மின்சார வசதியில்லை என் காரணத்தால் திறக்கப்படாததால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர். மூணாறு நகரின் மையப்பகுதியில் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் தேவைக்காக இரண்டு கழிப்பறைகள் பல லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கழிப்பறைகள் கட்டி முடித்து பல மாதங்கள் கடந்தும் திறக்காமல் காட்சி பொருளாக உள்ளது. கழிப்பறையில் மின்சார சேவை இல்லாத காரணத்தால் திறக்க தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் கூறினார். மேலும் மின்சாரம் வேண்டும் என்று கண்ணன் தேவன் நிறுவனத்திடம் அதிகாரிகள் மனு அளித்தனர். நதியின் ஓரத்தில் கழிப்பறை அமைந்துள்ளதால் தடை இல்லா சான்று தேவை என தனியார் நிறுவன அதிகாரிகள் கூறிய நிலையில், இடுக்கி மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து பஞ்சாயத்து அதிகாரிகள் முறையிட்டனர். ஆட்சியரும் இதற்கு தடை விதிக்க பஞ்சாயத்து தலைவர் கருப்பசாமி மற்றும் செயலாளர் மதுசூதனன் உன்னிதான் ஆகியோர் நிதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளனர். ஒவ்வொரு நாளும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வரும் மூணாறில் கழிப்பறை வசதி இல்லாமல் பயணிகள் பரிதவித்து வருகின்றனர். மேலும் கேரள மின்வாரியத்தின் மின்சாரம் கிடைக்காத காரணத்தால் அரசு நிறுவனங்கள் தனியார் நிறுவனத்தை மின்சாரத்திற்காக நாட வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது.

Related Stories: