நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி சுவர் விளம்பரம், பிளக்ஸ் பேனர் அகற்றம்

நாமக்கல், மார்ச் 12: நாமக்கல் நகரில், அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் உள்ள அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணி நடந்து வருகிறது.  நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக, நாமக்கல் நகராட்சி ஆணையர் சுதா கூறியது: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், நாமக்கல் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தனியார் மற்றும் அரசு கட்டடங்கள் மற்றும் சுவர்களில் எழுதப்பட்டுள்ள அரசியல் கட்சியினரின் விளம்பரங்களை அழித்து, வெள்ளை அடிக்கும் பணி நடந்து வருகிறது. நகராட்சி எல்லைக்குள் பிளக்ஸ், பேனர், கட்அவுட் வைக்கவோ, போஸ்டர்கள் ஒட்டவோ கூடாது. அதேபோல், திரையரங்கிற்கு வெளியில் எந்தவிதமான பிளக்ஸ், பேனர் மற்றும் கட் அவுட் வைக்க கூடாது. இவைகளை அகற்றும் பணியில், நகராட்சி பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்ட பிளக்ஸ், 30க்கும் மேற்பட்ட இடங்களில் சுவரில் எழுதப்பட்டுள்ள விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நகராட்சி ஆணையர் சுதா கூறினார்.  இது தவிர, நாமக்கல் மாவட்டம் முழுதும் பேரூராட்சி, பஞ்சாயத்து ஆகிய பகுதிகளில் உள்ள விளம்பரங்கள் மற்றும் நெடுஞ்சாலையில் உள்ள பாலங்களின் சுவர்களில், வெள்ளையடித்து சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

Related Stories: