பணியிட மாறுதலை ரத்து செய்ய வலியுறுத்தி மன்னார்குடியில் அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, மார்ச்7: ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளை பணியிடம் மாறுதல் செய்ததை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசுக்கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசினர் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளை பணியிடம் நீக்கம் செய்தது.தமிழக அரசு அவர்களை பழிவாங்கும் நோக்கத்தில் பணியிடம் மாறுதல் என்ற பெயரில் காழ்ப்புணர்ச்சியோடு நிர்வாகிகளை பந்தாடுவதை கைவிட்டு அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய இடங்களிலேயே உடனடியாக பணியமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுக்கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர்.அந்த வகையில் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசினர் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26, 27 ல்கருப்பு பேட்ஜ் அணிந்து கல்லூரி வாயிலில்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த தமிழ்நாடு அரசுக்கல்லூரி ஆசிரியர் கழகத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியர்கள் கையெழுத்து போட்டு விட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி உள் ளிருப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசுக்கல்லூரி ஆசிரியர் கழக மன்னை கிளையின் தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். செயலாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார்.

கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுக்கல்லூரி ஆசிரியர் கழக தஞ்சை மண்டல பொருளாளர் கண்ணன் பேசுகையில்,  தமிழகஅரசு பழிவாங்கும் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படாமல்  எங்கள் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து எங்களை அரசு உதாசீனப்படுத்தினால் மாநில தலைமையின் வழிகாட்டுதலின் பேரில் போராட்டங்களை தீவிரப்படுத்துவோம் என்றார்.

Related Stories: