ஐகோர்ட்டில் அதிர்ச்சி வழக்கு ரத்தம் கொடுக்க சென்ற வாலிபரின் கிட்னியை ‘அபேஸ்’ செய்த ஆஸ்பத்திரி

மதுரை, பிப்.28: மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த சகிலாபானு. இவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எனது கணவர் இறந்த நிலையில், 2 மகன்கள், ஒரு மகளுடன் வசித்து வருகிறேன். மூத்த மகன் முகமது பக்ருதீன் 10வது படிப்பை பாதியில் நிறுத்திய நிலையில், போட்டோகிராபராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அறிமுகமான ராஜா முகமது, தனது  அக்கா மகன் அசாருதீனுக்கு ரத்தம் தேவைப்படுகிறது என கூறினார். இதனால் எனது மகன் முகமது பக்ருதீன், ரத்தம் அளிக்க கடந்த அக்.17ல்  மதுரை வளர்நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது முகமது பக்ருதீனின் ரத்தத்தில் நோய் உள்ளது எனக்கூறியவர்கள், இங்கு தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றனர். இதனால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்தோம். அப்போது சிகிச்சை என்ற பெயரில் முகமது பக்ருதீனின் ஒரு கிட்னியை திருடிவிட்டனர்.  

 

இதுதொடர்பாக ராஜா முகமதுவிடம் கேட்டபோது, அசாருதீனுக்கு எனது மகனின் திருடிய கிட்னியை பொருத்தியது தெரியவந்தது. மேலும் எங்களை மிரட்டினர். இது தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே எனது மகனின் கிட்னியை திருடியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி சேஷசாயி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக மதுரை காவல்துறை ஆணையர் தலைமையில் விசாரிக்க உத்தரவிட்டு வழக்கை

முடித்துவைத்தார். எஸ்பி விசாரிக்க உத்தரவு

Related Stories: