காரைக்குடி, பிப். 27:காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் மாசி-பங்குனி விழா நேற்று பூச்சொரிதலுடன் துவங்கியது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி விழா மிகவும் பிரசித்துபெற்றது. இக்கோயில் பால்குட விழாவில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். ஒரு மாதத்திற்கு விழா நடக்கும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று பூச்சொரிதலுடன் துவங்கியது.