அரசு கல்லூரியில் திருக்குறள் கருத்தரங்கம்

சிவகங்கை, டிச. 30: சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் கன்னியாகுமரி 133 அடி திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவை முன்னிட்டு திருக்குறள் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்த்துறை தலைவர் ராஜலெட்சுமி வரவேற்றார். முதல்வர் நளதம் தலைமை வகித்தார். வள்ளுவரின் ஆட்சிநெறி என்ற தலைப்பில் தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன், திருவள்ளுவர் காட்டும் அன்பு நெறி என்ற தலைப்பில் ஆசிரியர் பயிற்றுனர் புலவர் காளிராசா ஆகியோர் பேசினார். இதனை தொடர்ந்து திருக்குறள் சுட்டும் பெண்கள் என்ற தலைப்பில் இளையான்குடி டாக்டர் ஜாகிர்உசேன் கல்லூரி தமிழ்த்துறை(முதுகலை) தலைவர் சேவியர் ராணி பேசினார். இதில் அனைத்துத் துறைத்தலைவர், மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக கவுரவ விரிவுரையாளர் சித்ரா நன்றி கூறினார்.

Related Stories: