கீழக்கரை, ஜன. 3: கீழக்கரையில் நகர்மன்ற கூட்டம் நடந்தது. நகர்மன்ற தலைவர் ஷெஹானாஸ் ஆபிதா தலைமை வகித்தார். ஆணையாளர் கிருஷ்ணவேணி, நகர்மன்ற துணை தலைவர் ஹமீது சுல்தான், நகராட்சி பொறியாளர் அருள் முன்னிலை வகித்தனர். உதவியாளர் தமிழ்ச்செல்வன் வாசித்த 23 தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு ஏற்கப்பட்டன. இக்கூட்டத்தில் நகர்மன்ற மாற்றுத்திறன் நியமன உறுப்பினர் சபீர் அலி, தன்னை நியமன உறுப்பினராக நியமித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் நகர்மன்ற உறுப்பினர்கள் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பான அரசாக திகழும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2026 பொது தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்றும், சென்னை விமான நிலையம் அருகே ஹஜ் இல்லம் அமைத்ததற்கும் நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினர்கள் தங்களது ேகாரிக்கைகள் குறித்து தெரிவித்தனர். தொடர்ந்து கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நகராட்சி பொறியாளர், துப்புரவு அலுவலர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு நகர்மன்ற தலைவர் அறிவுறுத்தினார். இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் பைரோஸ் பாத்திமா, பாட்ஷா, மீரான் அலி, காயத்ரி, முஹமது ஹாஜா சுகைபு, சப்ராஸ் நவாஸ், ஷேக் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கீழக்கரையில் நகர்மன்ற கூட்டம்
- சபை
- கீழக்கரை
- நகராட்சி மன்றம்
- ஷெஹனாஸ் அபிதா
- ஆணையாளர்
- கிருஷ்ணவேணி
- மாநகர
- துணைத்தலைவர்
- ஹமீத் சுல்தான்
- மாநகரப் பொறியாளர்
- அருள்
- உதவியாளர்
- தமிழ் செல்வன்
