கொட்டாம்பட்டி பகவதி அம்மன் கோயில் தேரோட்டம்

மேலூர், பிப்.27: மேலூர் அருகே கொட்டாம்பட்டியில் பகவதி அம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மேலூர் அருகே கொட்டாம்பட்டி குன்னாரம்பட்டியில் மந்தை பகவதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் நேர்த்தி கடன் இருந்த பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று முன்தினம் நள்ளிரவில் நடைபெற்றது. ஊர் மந்தை குளத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் கொண்டு வரப்பட்ட அம்மன் தேரடி வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றது.

பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். அம்மனுக்கு பால், பன்னீர் உட்பட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. குழந்தை வரம், திருமண பாக்கியம் போன்றவை வேண்டினால் நிறைவேறும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. திரளான பக்தர்கள் கோயில் திருவிழாவில் கலந்து கொண்டனர். கொட்டாம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: