கும்மிடிப்பூண்டியில் மரக்கன்றுகள் நடும் விழா

கும்மிடிப்பூண்டி, பிப்.26:  கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சார்பில் நடந்த தீவிர பிளாஸ்டிக் ஒழிப்பு நிகழ்ச்சியை  செயல் அலுவலர் கலாதரன் துவக்கி வைத்தார். இளநிலை உதவியாளர் நரேந்திரன், பதிவறை எழுத்தர் கருணாநிதி, சுகாதார மேற்பார்வையாளர் கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சமூக ஆர்வலர்கள் கும்மிடிப்பூண்டி காந்தி, உலக மைய நிர்வாகி எம்.எல்.ராஜேஷ், பெப்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் சுரேஷ்பாபு ஆகியோர் பிளாஸ்டிக் ஒழிப்பின் அவசியம் பற்றி பேசினர். இதைத் தொடர்ந்து பேரூராட்சி முழுவதும் வீடு, கடைகள் மற்றும் நிறுவனங்களில்  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள உள்ளதா என்று ஆய்வு செய்தனர். இதன்பிறகு பள்ளிக்கூடம் மற்றும் தபால் தெரு, மேட்டு தெரு பகுதிகளில் பேரூராட்சி ஊழியர்கள் மரக்கன்றுகள் நட்டனர்.

Related Stories: