மணப்பாட்டில் ஐஸ்கட்டி உடைக்கும் இயந்திரத்தில் கால் சிக்கி சிறுவன் படுகாயம்

உடன்குடி, பிப். 22:  உடன்குடி அருகேயுள்ள மணப்பாடு ராஜாதெருவைச் சேர்ந்த அந்தோணிராஜ் மகன் இளங்கோ (15). தாய் ராணியுடன் வசித்து வரும் இளங்கோ மணப்பாட்டில் மீன்பிடித்து ஏலம் விட்டபின் அவற்றை வெளியூர்களுக்கு வாகனங்களில் கொண்டு செல்ல ஐஸ் விநியோகிக்கும் குடோனில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் வேலைக்குச் சென்ற சிறுவன் ஐஸ் கட்டியை உடைப்பதற்கென பிரத்யேகமாக பயன்படுத்தும் மிஷனில் ஐஸ் கட்டியை போட்டு உடைத்தார். பெரிய ஐஸ் கட்டியாக இருந்ததால் அதை காலால் மிதித்தபோது திடீரென நிலைதடுமாறியதில் மிஷினில் அவரது வலதுகால் சிக்கிக்கொண்டதில் சேதமடைந்தது. இதனால் வேதனை தாளாமல் அலறிய அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்த மீனவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: