பவானிசாகர் அருகே அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை

சத்தியமங்கலம், பிப். 21:  பவானிசாகர் அருகே உள்ள எரங்காட்டூர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். ஒரு பள்ளிக்கட்டிடத்தில் செயல்பட்டு வந்த இந்த பள்ளிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துணைசுகாதார நிலையத்தின் பின்புறம் கூடுதலாக 2 பள்ளிக்கட்டிடங்கள் கட்டப்பட்டது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதால் பாதுகாப்பின்றி உள்ளது. இரவு நேரத்தில் மது அருந்துவோர் இந்த பள்ளி வளாகத்தில் மது பாட்டில்களை எறிந்துவிட்டு செல்வதால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.    எனவே உடனடியாக இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எரங்காட்டூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: