பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

மதுரை, பிப்.21:  மதுரையில் மத்திய அரசை கண்டித்து நடந்த பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக முடிந்தது.

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவையை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசு விதிப்படி பென்சன் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.  மொபைல் டவர்களை பராமரிக்கும் பணிக்கு அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில் நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் நிர்வாகிகள் செல்வின் சத்தியராஜ், ராஜேந்திரன், அகமதுயூனுஸ்,  அருணாச்சலம் மற்றும் மாநில இணைச்செயலாளர் அன்பழகன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்ததாக பிஎஸ்என்எல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories: