தல்லாகுளம் தீயணைப்பு நிலையம் முன்பு தேங்கிய கழிவுநீரால் துர்நாற்றம் அவதிப்படும் வீரர்கள்

மதுரை, பிப்.21: தல்லாகுளம் தீயணைப்பு நிலையம் முன்பு கழிவுநீர் தேங்கியுள்ளதால், உருவாகும் துர்நாற்றத்தால் வீரர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மதுரையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தல்லாகுளம் தீயணைப்பு நிலையம் இருந்து வந்தது. இங்கு ரூ.26 கோடியில் புதிதாக கூடுதல் கலெக்டர் அலுவலக கட்டடம் கட்டும் பணி கடந்த ஆண்டு துவங்கியது. அப்போது தீயணைப்பு நிலையத்திற்கு எதிரில் உள்ள மதுரை மாவட்ட ஊராட்சி அலுவலக வளாகத்தில் இடம் வழங்கப்பட்டது. இங்குள்ள ஒரு கட்டடத்தில் தீயணைப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மதுரை மாவட்ட ஊராட்சி அலுவலகத்திற்காக கட்டப்பட்டுள்ள கழிவுநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதிலிருந்து வெளியேறும் கழிவுநீர், தீயணைப்பு நிலையம் முன்பாக இருக்கும் பள்ளத்தில் தேங்கி நிற்கிறது. இதை கடந்து வீரர்களால் அலுவலகத்திற்குள் செல்ல முடியவில்லை. மேலும் அலுவலகத்திற்குள் அமரக்கூட முடியவில்லை. அந்த அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கழவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. இந்த கொசுக்களால் ஊராட்சி அலுவலக ஊழியர்களுக்கு பாதிப்பு இல்லை. ஏனெனில் அவர்கள் இரவில் இருக்க மாட்டார்கள். நாங்கள் இரவு பகல் சுழற்சி முறையில் இங்கு பணிபுரிந்து வருகிறோம். கொசுக்கடி தாங்க முடியவில்லை. சுகாதாரக்கேடு உருவாகி வருகிறது. எனவே கழிவுநீர் தேங்குவதை நிரந்தரமாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: