போலி ஆவணம் தயாரித்து மோசடி 6 பேர் மீது வழக்கு

நாசரேத், பிப்.21: நாசரேத் அருகேயுள்ள வகுத்தான் குப்பம்-கந்தசாமிபுரம் கட்டேரியாடும் சுவாமி கோயில் தர்மகர்த்தாவாக இருப்பவர் ராஜபாண்டியன். இந்த கோயிலின் அருகில் கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதற்கு ஆலய நிர்வாகிகள் ராஜபாண்டியனிடம் அனுமதி கேட்டனர். இதுகுறித்து கோயில் வரிதாரர்களிடம் கேட்டு தெரிவிப்பதாக அவர் தெரிவித்தார். இதற்கிடையே ஆலய நிர்வாகிகளான தனபால், செல்வ சிங், எபனேசர், அன்பு தங்கபாண்டியன் ஆகிய 4 பேரும் சேர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த காமராஜ், கணேசன் ஆகியோரிடம் முறையிட்டனர். பின்னர் அவர்கள் 6 பேரும் சேர்ந்து அங்கு கிறிஸ்தவ ஆலயம் கட்ட அனுமதிப்பதாக போலியான தடையில்லா சான்று ஆவணம் தயாரித்து, வருவாய் துறையினரிடம் சமர்ப்பித்தனர். இதையடுத்து அங்கு ஆலயம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ராஜபாண்டியன், நாசரேத் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ் விசாரித்து போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்ததாக தனபால், செல்வ சிங், எபனேசர், அன்பு தங்கபாண்டியன், காமராஜ், கணேசன் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: