தலைமை ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம்

ஈரோடு, பிப். 20: ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 மற்றும் எஸ்எஸ்எல்சி தேர்வு தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தலைமை வகித்தார்.  கூட்டத்தில் பிளஸ் 2 மற்றும் எஸ்எஸ்எல்சி தேர்வு நடைபெற உள்ளதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் தயாராக இருக்க வேண்டும். தேர்வுகளில் எந்த முறைகேடும் நடக்காதவாறு ஆசிரியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஈரோடு முத்துகிருஷ்ணன், பெருந்துறை ராமன், கோபி சிவக்குமார், பவானி ரேணுகாதேவி, சத்திமங்கலம் தேவேந்திரன் மற்றும் 236 பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கையேடு வெளியிடப்பட்டது.

Related Stories: