குளித்தலை போக்குவரத்து பிரிவில் போதிய காவலர் நியமிக்க வேண்டும் வழக்கறிஞர்கள் சங்க அவசர கூட்டத்தில் வலியுறுத்தல்

குளித்தலை, பிப். 20: குளித்தலை போக்குவரத்து பிரிவில் போதிய காவலர்கள் நியமிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் சங்க அவசர கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கரூர் மாவட்டம் குளித்தலை வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் சங்க தலைவர் சாகுல் அமீது தலைமையில் நேற்று நடைபெற்றது. செயலாளர் நாகராஜன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். குளித்தலை போக்குவரத்து காவல்நிலையத்தில் ஆய்வாளராக இருந்த பிச்சைராஜன் கடந்த 3 மாதங்களுக்கு முன் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

அதன் பிறகு இன்று வரை போக்குவரத்து காவல்நிலையத்திற்கு ஆய்வாளர் நியமிக்கப்படவில்லை. மேலும் குளித்தலை போக்குவரத்து காவல் நிலையத்தில் ஒரு ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர், 9 காவலர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தனர். இந்நிலையில் தற்போது ஒரு உதவி ஆய்வாளர், 4 காவலர்கள் மட்டுமே உள்ளனர். குளித்தலை நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்துள்ள நிலையில் திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர்ப்பலி ஏற்பட்டு வருகிறது.

ஆகவே தேவையான காவலர்களை நியமிக்க வேண்டும். விபத்து ஏற்பட்டு உயிரிழக்கும் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கும் போது காலம் தாழ்த்தாமல் போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் குளித்தலையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் உள்பட போதிய காவலர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.குளித்தலையில் வக்கீல்கள்நீதிமன்றம் புறக்கணிப்புசென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2009ம் ஆண்டு வழக்கறிஞர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்திய தினமான நேற்று கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி குளித்தலை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டு குளித்தலை நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பு செய்தனர்.

Related Stories: