விவசாயிகளுக்கு உதவித்தொகை விஏஓ அலுவலகத்தில் ஆய்வு

அந்தியூர், பிப்.15: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் செல்லும் சாலையில் விஏஒ., அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, அந்தியூர் தாசில்தார் மாலதி மற்றும் அதிகாரிகளுடன் வந்து நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

பிரதம மந்திரி திட்டத்தில் 5 ஏக்கருக்கு குறைவாக உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணையாக, ரூ.2000 வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
Advertising
Advertising

ஆனால், இந்த பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் விண்ணப்பிக்கவில்லை. இதற்கு விவசாயிகள் மத்தியில் போதிய  விழிப்புணர்வு இல்லாததே காரணம் என கூறப்படுகிறது.  இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா மற்றும் அதிகாரிகள் நேற்று விஏஓ அலுவலகத்தில் ஆய்வு நடத்தினர். இதேபோல் பர்கூர் மலைப்பகுதியில் உள்ள 33 குக்கிராமங்களிலும் ஆய்வு செய்தனர்.

Related Stories: