தார் தட்டுப்பாட்டால் ஒட்டு வேலையை பார்க்கும் துறைகள்

மதுரை, பிப். 14: தார் தட்டுப்பாடு காரணமாக மதுரையில் பள்ளமான ரோட்டில் மண்ணை பரப்பி ஒட்டு வேலையை மட்டும் மாநகராட்சி, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகள் செய்து வரு

கிறது.மதுரை மாநகராட்சியை பொறுத்தமட்டில் 1572.53 கிமீ நீள சாலைகளை பராமரித்து வருகிறது. இதில் தார் சாலைகள் மட்டுமே 947.94 கிமீ தூரமாகும். கடந்த 2017-18ம் ஆண்டில் மட்டுமே ரூ.41.66 கோடி செலவில் சாலையில் ஒட்டுவேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதவிர நெடுஞ்சாலைத்துறையும் தனியாக பல ஆயிரம் கிமீ தூர சாலைகளை பராமரித்தும் சீரமைத்தும் வருகின்றன. இதற்கு தேவையான தார், சென்னை மணலி பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களிடம் இருந்து வாங்க வேண்டும். இங்கு தார் சப்ளையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Advertising
Advertising

இதனால் தார் வரத்து இல்லை. இதனை சமாளிக்க, மதுரை மாநகராட்சி பகுதிகளில் பள்ளமான ரோடுகளில் ஒட்டுவேலை பார்க்க, மண்ணை பரப்பி சாமாளித்து வருகின்றனர். இதே வேலையை நெடுஞ்சாலைத்துறையும் செய்து வருகிறது.

Related Stories: