பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட்டம்

ராசிபுரம், பிப்.14: நாமக்கல் மற்றும் சேலத்தில் இயங்கி வரும் பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளில், மழலையர்களுக்கான ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். தாளாளர் மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றினார். தலைமையாசிரியை ஷகிலாபானு வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் நிரஞ்சனி ஆண்டறிக்கை வாசித்தார்.  இதில் சிறப்பு விருந்தினராக குழந்தைகள் மற்றும் மனநல மருத்துவர் ஆர்த்திராஜரத்தினம் கலந்து கொண்டு பேசியதாவது:  

இன்றைய குழந்தைகளிடமும், இளைஞர்களிடமும் சிந்தனை திறனும், சாதிக்கும் ஆற்றலும் அதிகமாக உள்ளது. பெற்றோர்கள் மற்றும் சமூகம் அவர்களை வளர்க்கும் விதமும் பெருமளவில் மாறிக் கொண்டே வருகிறது. குழந்தைகளை கஷ்டப்படுத்தாமல் உறவுகளிடமும், சமூகத்திலும், நண்பர்களிடமும் நன்கு பேசி, விளையாட செய்யுங்கள். விளையாடும் போது தான் நரம்பியல், சிந்திப்பது, வார்த்தைகளை உச்சரிக்கும் திறன் போன்ற அனைத்து திறன்களும் மேம்படுகிறது. குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள்.  திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பாக இருங்கள். அப்பொழுது தான் சமுதாயத்தின் நல்ல குடிமக்களாக அவர்கள் உருவாக முடியும். இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து இசை, விளையாட்டு, கல்வி என்று பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த குழந்தைகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதனையடுத்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் கல்வி நிறுவனங்களின் செயலாளர் பழனிவேல், இணை செயலாளர் பழனிவேல், இயக்குநர் செந்தில், சதீஸ், துணை முதல்வர் ரோஹித் சதீஸ், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை சுஜாதா நன்றி கூறினார்.

Related Stories: