திருமங்கலம் மக்கள் ஏமாற்றம் வழக்கறிஞர்களுக்கு வீட்டுமனை ஒதுக்க வேண்டும்

மதுரை, பிப். 13: வழக்கறிஞர்களுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்ய கோரி மதுரை பார் கவுன்சில் நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.மதுரை மாவட்ட நீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் இளங்கோ, பொருளாளர் அலிசித்திக் மற்றும் நிர்வாகிகள் நேற்று கலெக்டர் நடராஜனிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.அதில், ‘‘நீதிமன்றங்களில் பார் கவுன்சிலுக்கு தனி அலுலகம், சேர், நூலகம், இ-நூலகம், இணையதளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். வழக்கறிஞர்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதில், வழக்கறிஞர் மற்றும் குடும்பத்தினருக்கு தனி காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும். பார்கவுன்சில் பதிவு செய்து, வக்கீல் தொழிலில் ஈடுபட்டு 5 ஆண்டுகள் பயிற்சி எடுக்கும் வரை அவர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். வழக்கறிஞர்களுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்ய வேண்டும். சட்டவிதிப்படி அமைக்கப்பட்ட அனைத்து கமிஷனுக்கும் வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது.மனுவை பெற்று கொண்ட கலெக்டர் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார்.

Advertising
Advertising

Related Stories: