குமாரமங்கலத்தில் ரயில் நின்று செல்ல பலமுறை மனுக்கொடுத்தும் நடவடிக்கை ஏதுமில்லை சாலையில் போராட்டம் நடத்த முடிவு

புதுக்கோட்டை,பிப்.12: குமாரமங்கலத்தில் ரயில் நின்று செல்ல பல முறை மனுக்கொடுத்தும் நடவடிக்கை  இல்லாததால் புதுகை சாலையில் போராட்டம் நடத்த மக்கள் முடிவு செய்துள்ளனர்.

புதுக்கோட்டை  கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர் கூட்டம் நேற்று  நடைபெற்றது. டிஆர்ஓ ராமசாமி தலைமை வகித்து மனுக்களை பெற்றார். சமூக நல  பாதுகாப்புக்குழு உதவித் தலைவர் பாலகிருஷ்ணன் கொடு த்த மனுவில்  கூறியிருப்பதாவது: விவேகானந்த நகர் மக்களுக்கு குடிநீர் வசதி செய்து  கொடுக்க வேண்டும்.

பல்லவன் விரைவு ரெயிலை குமாரமங்கலம் ரெயில் நிலையத்தில்  நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை குறை தீர்க்கும் நாள்  கூட்டம் உள்பட பல்வேறு கூட்டங்களில் மக்கள் மனு அளித்தும், இதுவரை எந்த ஒரு  நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

எனவே வருகிற மார்ச் மாதம் 5ந் தேதி  திருச்சி-புதுக்கோட்டை சாலையில் மாத் தூர் ஆவூர் பிரிவு சாலையில் மறியல்,  தர்ணா மற்றும் உண்ணாவிரத போரா ட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.

Related Stories: