நலிவடைந்த விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை

திண்டுக்கல், பிப்.12: நலிவடைந்த விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெற வரும் 21க்குள் விண்ணப்பிக்கலாம்.விளையாட்டுத்துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகள் நிகழ்த்தி தற்போது நலிந்தநிலையில் உள்ளவர்களுக்கு அரசு ஓய்வூதியமாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கி வருகிறது. இதில் பயன்பெற குறைந்தபட்சம் தேசிய போட்டியில் பங்கேற்றிருக்க வேண்டும். இத்துடன் முதல் மூன்று இடம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பள்ளிகளுக்கு இடையேயான தேசிய, பல்கலைக்கழகங்களுக்கு இடையோன போட்டி, ஒலிம்பிக் சங்கத்தினரால் அங்கீகரிக்கப்பட்ட போட்டி, மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடந்த போட்டிகளில் பங்கேற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.கடந்த ஏப்ரல் முதல் 58 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். மாத வருமானம் ரூ.6 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசின் ஓய்வூதியத் திட்டத்தில் பயன்பெறுபவர்கள், முதியோர் விளையாட்டுப்போட்டியில் வென்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.மேலும் விபரங்களுக்கு www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தையோ (0451) 2461162 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். தகுதியுடைவர்கள் வரும் 21ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என்று இளைஞர் நல அலுவலர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Related Stories: