அவரையில் காய் புழு தாக்குதலை தடுக்கும் முறைகள்

 

பழநி, மே 4: பழநி, தொப்பம்பட்டி பகுதிகளான அக்கமநாயக்கன்புதூர், கரடிகூட்டம், காவலப்பட்டி, கணக்கன்பட்டி, பாப்பம்பட்டி, சத்திரப்பட்டி, போதுப்பட்டி, தாசிரிபட்டி, அமரபூண்டி, புளியம்பட்டி, வாகரை, பொருளூர் உள்ளிட்ட கிராமங்களில் கத்தரிக்காய், வெண்டைக்காய், வெங்காயம், அவரை, தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. தற்போது அவரை அதிகளவு பயிரிடப்பட்டுள்ளது. இக்காயில் தற்போது காய்ப்புழு தாக்குதல் ஏற்பட்டு செடியிலேயே வீணாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நோய் தாக்குதல் குறித்து தோட்டக்கலை துறை அதிகாரிகளிடம் கேட்ட போது கூறியதாவது: காய்ப்புழு தாக்குதல் ஆரம்ப கட்டமாக இருந்தால் குளோரி பைரிபாஸ் 1 லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி அளவிலும், தாக்குதல் அதிகளவு இருந்தால் டிசைடர் மருந்து 1 லிட்டருக்கு 1 மில்லி கலந்து இரண்டு, மூன்று நாட்களுக்கு தெளிக்க வேண்டும். தாக்குதல் புழுவின் பரிணாமம் முட்டை, புழு என பல்வேறு கட்டங்களாக இருப்பதால் லார்வின் மருந்தை 10 லிட்டர் நீருக்கு 20 கிராம் கலந்து தெளித்து வந்தால் இந்நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம். இவ்வாறு கூறினர்.

The post அவரையில் காய் புழு தாக்குதலை தடுக்கும் முறைகள் appeared first on Dinakaran.

Related Stories: