சாலை மறியல் போராட்டம் எதிரொலி மணமேல்குடி பேருந்து நிலையம் மீண்டும் இயங்க நடவடிக்கை சமாதான கூட்டத்தில் முடிவு

மணமேல்குடி,பிப்.8: மணமேல்குடியில் செயல்பட்டு வரும் போக்குவரத்து பணிமனையை விரிவாக்கம் செய்வது மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியல் செய்யப் போவ தாக மணமேல்குடி வர்த்தக சங்கம் சார்பாக அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து நேற்று மணமேல்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரெத்தினசபாபதி, வட்டாட்சியர் வில்லியம்மோசஸ், மண மேல்குடி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆகியோர் தலைமையில் நேற்று சமாதான கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில்  மணமேல்குடி போக்குவரத்து பணிமனை விரிவாக்கம் சம்மந்தமாக நிலமதிப்பு நிர்ணயம் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதன்படி பணி மனை விரிவாக்கம் செய்யப்படும். மேலும் தினமும் 3பேருந்துகள் பணிமனையில் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நேற்று நடைபெற விருந்த சாலைமறியல் கைவிடப்பட்டது.மேலும் இந்த சமாதான கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் சீனியர் வர்த்தக சங்கத் தலைவர்கள் முத்துமாணிக்கம், ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: