போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீதான நடவடிக்கையை அரசு திரும்ப பெறவேண்டும் ஜாக்டோ-ஜியோ வலியுறுத்தல்

சிவகங்கை, பிப்.7: ‘தமிழக முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பணிக்கு திரும்பிய ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும் என ஜாக்டோ ஜியோ சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர், ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப்பாண்டியன், ஜோசப் சேவியர் தலைமையில் நடந்தது. மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்கள் செல்வக்குமார், முத்துச்சாமி முன்னிலை வகித்தனர். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சங்கர், இளங்கோ உள்ளிட்ட மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜன.22 முதல் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் ஜாக்டோ-ஜியோ சார்பில் நடந்தது. இந்நிலையில் மாணவர்கள் நலன் கருதியும், தமிழக முதல்வரின் வேண்டுகோளை ஏற்றும் போராட்டம் ஜன.30ல் விலக்கிக் கொள்ளப்பட்டது. போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு திரும்பிய ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் மற்றும் சிறை சென்றவர்களுக்கு தற்காலிக பணியிடை நீக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவுகளை விலக்கிக்கொண்டு அனைவரையும் பழைய பணியிடத்திலேயே பணியாற்ற அனுமதிக்க வேண்டும். மாவட்டத்தில் சிறை சென்ற 62 அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்குவது. அவர்கள் குடும்பங்கள் பாதிக்காத வகையில் உதவிகளை அனைத்து உறுப்பினர்களும் மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வங்கிக்கு தடை வேண்டும் விவசாயிகள் கூறியதாவது: மாவட்டம் முழுவதும் நூறு சதவீத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரச்னைக்குறிய பதிவுகளுக்கு மட்டும் நிறுத்தி விட்டு மற்ற விவசாயிகளுக்கு இழப்பீட்டை வழங்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் ஒரே மாதிரியாக வறட்சி பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சில பகுதிகளுக்கு மிகக்குறைந்த அளவில் இழப்பீடு வழங்குவது என்பதற்கு கணக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி தான் காரணம்.இதுபோல் குளறுபடி ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீட்டை விவசாயிகள் வாங்கியுள்ள பயிர்க்கடன் உள்ளிட்ட கடன்களில் வரவு வைக்கக்கூடாது. இவ்வாறு வரவு வைக்கக்கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டும் வங்கி நிர்வாகம் தொடர்ந்து வரவு வைக்கும் பணியை செய்கிறது. சேமிப்பு கணக்கில் வரவு வைத்து விவசாயிகளின் கையொப்பம் இன்றி வங்கி நிர்வாகம் இழப்பீடு பணத்தை கையாள்வதை தடை செய்ய வேண்டும் என்றனர்.

Related Stories: