திருப்பரங்குன்றம், பிப்.2: திருப்பரங்குன்றம் அருகே பெண் ஓட்டிய டூவீலரில் கொடிய விஷமுடைய கொம்பேறி மூக்கன் பாம்பு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள வி.பி.சிந்தன் நகரை சேர்ந்தவர் லீலா. இவர் தன்னுடைய டூவீலரில் தனக்கன்குளம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென வாகனத்தின் முன்பு ஏதோ சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக வாகனத்தை நிறுத்தி பார்த்த போது உள்ளே பாம்பு இருப்பதைப் பார்த்து லீலா அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து வனத்துறை மீட்புக்குழுவிற்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து வாகனத்தின் உட்புறம் இருந்த கொடிய விஷமுடைய கொம்பேறி மூக்கன் பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.