992 ஸ்வீட் கடைகளில் தரம் பரிசோதனை குறைபாடு இருந்தால் ரூ.6 லட்சம் அபராதம்

 

மதுரை, நவ. 8: கடந்த இரு வாரமாக உணவு பாதுகாப்பு துறையினர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஸ்வீட் கடைகளில் தொடர் சோதனைகள் நடத்தினர். இதன்படி மாவட்டத்தின் 992 கடைகளில் இந்த உணவு சோதனை நடத்தப்பட்டது. சுற்றுப்புறத் தூய்மையின்றி, சுகாதார சீர்கேட்டுடன் இருந்த 15 ஸ்வீட் கடைகள் கண்டறியப்பட்டு, தலா ரூ.1000 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட பொறுப்பு அதிகாரி ஜெகவீரபாண்டியன் கூறும்போது, ‘‘மாவட்டம் முழுவதும் ஸ்வீட் கடைகளில் நடத்திய சோதனைகளின் முடிவில், 300 சாம்பிள்கள் எடுக்கப்பட்டு, அதன் தன்மை குறித்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவற்றின் தரம் குறைபாடு கண்டறியப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கடைகளுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

The post 992 ஸ்வீட் கடைகளில் தரம் பரிசோதனை குறைபாடு இருந்தால் ரூ.6 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: