மேலூர் அருகே விறுவிறுப்பான மாட்டு வண்டி பந்தயம்: 62 ஜோடி காளைகள் பங்கேற்பு

மேலூர், நவ. 10: மேலூர் அருகே வெள்ளரிப்பட்டியில் 62 ஜோடி காளைகள் கலந்து கொண்ட மாட்டு வண்டி பந்தயம் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. மேலூர் அருகே வெள்ளரிப்பட்டியில் மாட்டு வண்டி பந்தயம் நேற்று நடைபெற்றது. இதன்படி முசுண்டகிரிப்பட்டி முதல் ஆமூர் விலக்கு வரை நடைபெற்ற இப்பந்தயத்தில், பெரிய மாட்டில் 9 ஜோடிகள் மற்றும் சிறிய மாட்டில் 20 ஜோடிகள் கலந்து கொண்டன. பெரிய மாடுகளில் சிங்கம்புணரி சேவுகமூர்த்தி, வெள்ளரிப்பட்டி சமர்வித் ரெங்கபோஸ் முதல் பரிசும், அப்பன் திருப்பதி ஆனந்த் அய்யனார், அம்மன்பேட்டை மங்கான் செல்வம் 2ம் பரிசும், கல்லணை விஷ்வா ரவிசந்திரன் 3ம் பரிசும், வெள்ளரிப்பட்டி அழகு கருப்புசாமி 4ம் பரிசும் பெற்றனர்.

சிறிய மாடுகளில் தூத்துக்குடி மாவட்டம், பூசனூர் சண்முக சாமி, பிரத்ரிஷா, தூத்துக்குடி மாவட்டம் வானமலை பெருமாள், கயத்தார் எஸ்பி ஹோட்டல், சொக்கலிங்கம் புதூர் சக்தி, தேனி யானைமலைப்பட்டி ரஞ்சித், மதகுபட்டி கல்யாண சாமி செல்வம், கூடலூர் தவம் பிரதர்ஸ் பரிசு பெற்றனர். பூஞ்சிட்டு மாடுகள் பிரிவில் 33 ஜோடி காளைகள் கலந்து கொண்டதால் போட்டி 2 சுற்றுகளாக நடத்தப்பட்டது. முதல் சுற்றில் கலந்து கொண்ட 17 மாட்டு வண்டிகளில் முதல் பரிசு மலம்பட்டி காயத்திரி ஸ்டோர், 2ம் பரிசு எட்டிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பங்கஜம், மேலூர் டைம் பாஸ், 3ம் பரிசு சத்திரப்பட்டி முத்துகிருஷ்ணன், 4ம் பரிசு கல்லணை விஷ்வா ரவிச்சந்திரன் ஆகியோர் பெற்றனர்.

2ம் சுற்றில் வெள்ளரிப்பட்டி மனோஜ், கூடலூர் தியாகு, தவம் பிரதர்ஸ், ஆமந்தூர் பட்டி நகுல், நரசிங்கம்பட்டி கார்முகில் ராஜா, சிங்கம்புணரி செந்தில்குமார், சாத்தமங்கலம் கருப்பையா அம்பலம் ஆகியோர் பரிசு பெற்றனர். இதையடுத்து மாடுகளின் உரிமையாளர்க்கு பரிசுத்தொகை, கேடயம் வழங்கப்பட்டது. இந்த மாட்டு வண்டி பந்தயத்தை திரளான ரசிகர்கள் கண்டு களித்தனர். மேலூர் மற்றும் ஒத்தக்கடை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை வெள்ளரிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பிரஸ்னேவ் செய்திருந்தார்.

The post மேலூர் அருகே விறுவிறுப்பான மாட்டு வண்டி பந்தயம்: 62 ஜோடி காளைகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: