மதுரை, நவ. 5: மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில், மதுரை கிழக்கு, சோழவந்தான் மற்றும் மேலூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பாக முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம், நாளை (நவ.6) நடைபெறும் என, வடக்கு மாவட்ட செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார், இதுகுறித்து அமைச்சர் பி.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: கழகத் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, கழக இளைஞரணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனையின் படி வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைவதற்கான அடித்தளம் அமைக்கும் வகையில் தமிழ்நாட்டின் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் தொகுதி மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, மதுரை வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மதுரை கிழக்கு, சோழவந்தான் மற்றும் மேலூர் தொகுதிகளுக்கு தொகுதிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை (நவ.6) நடைபெறுகிறது. மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட மதுரை மேற்கு, வடக்கு ஒன்றியங்களுக்கு காலை 10 மணிக்கு குறிஞ்சி மஹாலிலும், கண்ணனேந்தல் பகுதிக்கு காலை 11 மணிக்கு பரசுராமன்பட்டியில் உள்ள வட்டக் கழக அலுவலகத்திலும் கூட்டம் நடைபெறும். மதுரை கிழக்கு ஒன்றியத்திற்கு பிற்பகல் 3 மணிக்கு ராஜகம்பீரம் மந்தை திடல் மற்றும் மதுரை கிழக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்திற்கு மாலை 4 மணிக்கு கருப்பாயூரணி தேவி பேலஸ், வண்டியூர் பகுதிக்கு மாலை 5 மணிக்கு, வண்டியூர் பங்குனி உத்திரம் மஹால், மதுரை கிழக்கு, வடக்கு ஒன்றியத்திற்கு மாலை 6 மணிக்கு ஒத்தக்கடை, சாரா மினி மஹால், திருப்பாலை பகுதிக்கு இரவு 7 மணிக்கு அய்யர்பங்களாவில் உள்ள மாவட்டக் கழக அலுவலகம் மற்றும் ஆனையூர் பகுதிக்கு இரவு 7.45 மணிக்கு கூடல் புதூர், ஐஸ்வர்யா மஹாலில் நடைபெறுகிறது.
அதேபோல் சோழவந்தான் தொகுதிக்கான வாடிப்பட்டி வடக்கு ஒன்றியத்திற்கு காலை 10 மணிக்கு வாடிப்பட்டி ஒன்றியக் கழக அலுவலகம், வாடிப்பட்டி பேரூர் பகுதிக்கு காலை 11 மணிக்கு வாடிப்பட்டி பேருந்து நிலையம் அருகிலும், சோழவந்தான் பேரூர் கழகத்திற்கு நண்பகல் 12 மணிக்கு சந்திரன் மஹால், வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்திற்கு பகல் 12.30 மணிக்கு திருவேடகம் தண்ணீர் பிளாண்ட். அருகில், மதுரை மேற்கு ஒன்றியத்திற்கு பிற்பகல் 1.30 மணிக்கு பாசிங்காபுரம், அலங்காநல்லூர் கிழக்கு ஒன்றியத்திற்கு மாலை 5 மணிக்கு ஒன்றியக் கழக அலுவலகத்திலும், அதனைத் தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு அலங்காநல்லூர் பேரூருக்கும், மாலை 6 மணியளவில் அலங்காநல்லூர் மேற்கு ஒன்றியத்திற்கும், 6.30 மணிக்கு பாலமேடு பேரூர் பகுதிக்கும் என, தனித்தனியே நடைபெறுகிறது.
கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றியத்திற்கு காலை 10 மணிக்கு மேலூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்திலும், கொட்டாம்பட்டி கிழக்கு ஒன்றியத்திற்கு காலை 11 மணிக்கு ஒன்றியக் கழக அலுவலகம், மேற்கு ஒன்றியத்திற்கு பகல் 12 மணியளவில் வெள்ளாலப்பட்டி, மணப்பச்சேரி ஊராட்சி, மேலூர் கிழக்கு ஒன்றியத்திற்கு மாலை 5 மணிக்கு மேலூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் நடக்கிறது. மேலூர் வடக்கு ஒன்றியத்திற்கு மாலை 5.30 மணிக்கும், 5.45 மணிக்கு அ.வள்ளாலபட்டி பேரூர், 6 மணிக்கு மேலூர் தெற்கு ஒன்றியம், மாலை 6.30 மணிக்கு மேலூர் நகரம் என, அங்கு தொடர்ச்சியாக நடைபெறுகிறது.இந்த ஆலோசனை கூட்டத்தில் பாக முகவர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்டக் கழக, பேரூர் கழக நிர்வாகிகள் என அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
The post வடக்கு மாவட்ட திமுக சார்பில் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நாளை நடக்கிறது: அமைச்சர் பி.மூர்த்தி அறிக்கை appeared first on Dinakaran.