15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு ஜாம்புவானோடை ஓஎம்ஏ மெட்ரிக் பள்ளியில் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

முத்துப்பேட்டை, பிப்.1: முத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடை ஓஎம்ஏ மெட்ரிக் பள்ளியில் மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.  இதையொட்டி இப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். இதில் புகழஞ்சலியும, காந்தி படத்துக்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. காந்திய சிந்தனை குறித்த பாடல், பேச்சு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. யுகேஜி மாணவன் நிதில் ஜோனல் காந்தி வேடமிட்டு அவரது வரலாறு பேச்சுடன் காந்தி படத்திற்கு அஞ்சலியும் செலுத்தினார். பள்ளி சார்பில் அந்த மாணவனுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Related Stories: