திருத்துறைப்பூண்டி அருகே அடிப்படை வசதி, குடிநீர் கேட்டு கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

திருத்துறைப்பூண்டி, ஜன.25: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நெடும்பலம் ஊராட்சி  மங்களநாயகிபுரம் கிராமத்தில் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள்  மற்றும் கொள்ளிடம் குடிநீர் வழங்க  கோரி காலிக் குடங்களுடன் அப்பகுதி  பொதுமக்கள் நெடும்பலம் பைபாஸ் சாலையில்  நேற்று திடீர் மறியலில்  ஈடுபட்டனர்.   தகவலறிந்த ஒன்றிய ஆணையர்கள் முத்துக்குமரன், கார்த்தி,  டிஎஸ்பி சந்திரசேகரன் ஆகியோர் விரைந்து வந்து சாலை மறியலில்  ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரியநடவடிக்கை எடுக்கப்படும் என்று  தெரிவித்தனர். இதையடுத்து சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்த சாலை மறியலால்  திருத்துறைப்பூண்டி-பட்டுக்கோட்டை சாலையில் அரை மணி நேரம்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: