முத்துப்பேட்டை அரசு பள்ளியில் காவல்துறை விழிப்புணர்வு கருத்தரங்கம்

முத்துப்பேட்டை, ஜன.23: திருவாரூர்மாவட்டம், முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்த கருத்தரங்கம் எஸ்ஐ கணபதி தலைமையில் நடைபெற்றது. இதில் மாணவர்கள் மத்தியில் பாலியல் குற்றங்களில் இருந்து தப்பிக்க என்ன செய்யவேண்டும் என்பது குறித்து எஸ்எஸ்ஐ அண்ணாதுரை, ஏட்டு ரோத்திகா ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள்  உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

Related Stories: