வால்பாறையில் குடியிருப்பில் புகுந்த காட்டு யானைகள்

வால்பாறை, ஜன. 23:  வால்பாறை பகுதியில் அடர்வனப்பகுதிகளில் இருந்து  வரும் யானைகள்  தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்துவருகிறது.வால்பாறையில் உணவு தேடிவரும் யானைகள் வீட்டின் ஜன்னல் கதவுகளை உடைத்து வீட்டு உபயோக பொருட்களையும் விட்டுவைப்பதில்லை.  இந்நிலையில் நேற்று அதிகாலை பெரியகல்லார் எஸ்டேட்டில் புகுந்த யானைகள் 4 வீடுகளின் கதவுகளை உடைத்து அட்டகாசம் செய்துள்ளது. அதிலும் மேரி என்பவர் வீட்டை உடைத்த யானைகள் ஜன்னலை உடைத்தும் கதவை உடைத்தும் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து வெளியே போட்டுள்ளது. பெரியகல்லார்  முகாம் வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் காட்டு யானைகளை விடிய விடிய போராடி வனப்பகுதிக்குள் விரட்டினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: