இலுப்பூரில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

இலுப்பூர், ஜன.11: இலுப்பூரில் வருவாய்த்துறையினர்  சார்பில் மது அருந்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இலுப்பூர்  அரசு மருத்துவமனையில் துவங்கிய இந்த பேரணியை, தாசில்தார்  சோனை கருப்பையா  துவக்கி வைத்தார். பேரணியானது இலுப்பூர் முக்கிய  வீதிகள் வழியே தாலுகா அலுவலகம் அடைந்தது. பேரணியில்  மாணவர்கள் மது அருந்துதல் மற்றும் கள்ள சாரயத்தினால் ஏற்படும் விளைவுகள்  குறித்த பாதகைகளை ஏந்தியவாறு  விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக  வந்தனர். மாவட்ட கோட்ட கலால் அலுவலர் மனோகரன், இலுப்பூர் வருவாய்  ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, விஏஓ முரளிசங்கர் உள்ளிட்ட வருவாய்த்துறை  அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: