கரூர் ரயில் நிலையத்தில்வென்டிங் இயந்திரம் பழுதால் டிக்கெட் பெற பயணிகள் அவதி

கரூர்,ஜன.11:கரூர் ரயில் நிலையத்தில் வென்டிங் இயந்திரம் செயல்படாததால் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் எடுக்கின்றனர்.

கரூர் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் டிக்கெட் வழங்கம் வென்டிங் இயந்திரம் இரண்டு வைக்கப்பட்டுள்ளது. தினமும் பிற்பகல் 11மணியில் இருந்து 12மணிக்குள் பாலக்காடு - திருச்சி பாஸ்ட் பாசஞ்சர், ஈரோடுர- திருநெல்வேலி பாசஞ்சர் ரயில்கள் வந்து செல்லும். இந்த ரயில் களுக்கு செல்லும் பயணிகள் நுாற்றுக்கணக்கானோர் ரயில் நிலையத்திற்கு வந்தனர். இங்குமுன்பதிவு இல்லாத டிக்கெட் கொடுப்பதற்காக ஒரே ஒரு கவுன்டர் மட்டுமே செயல்படுகிறது. ஒரே சமயத்தில் அதிக பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கும் நோக்கில் வென்டிங் இயந்திரம் வைக்கப்பட்டது.

வழக்கமாக இயந்திரம் முன்பாக ஒரு அலுவலர் நின்று கொண்டு முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை கொடுப்பார். இயந்திரம் செயல்படாததால் தற்போது ஊழியரும் வருவதில்லை.முன்பதிவில்லாத டிக்கெட் பெறுவதற்கான ஒரு கவுன்டர் மட்டுமே செயல்படுகிறது. பயணிகள் நீண்டநேரம் காத்திருந்து டிக்கெட் பெற்றனர். பயணிகள் அதிகம் பேர் வரும் சமயத்தில் வென்டிங் இயந்திரம் மூலமாக டிக்கெட் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இயந்திரம் செயல்படாத பட்சத்தில் முன்பதிவில்லாத டிக்கெட் பெற கூடுதல் கவுன்டர்களை ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: