தேனி, ஜன. 11: தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உப்பார்பட்டி, தப்புக்குண்டு, காட்டுநாயக்கன்பட்டி பகுதியில் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடந்தது.தேனி ஒன்றிய திமுக சார்பில் தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உப்பார்பட்டி, தப்புக்குண்டு, காட்டுநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் தேனி ஒன்றிய திமுக பொறுப்பாளர் எம்.சக்கரவர்த்தி தலைமையில் நடந்தது. ஒன்றிய அவைத் தலைவர் ராம்தாஸ், பொருளாளர் பைரவசாமி முன்னிலை வகித்தனர்.