மாநில கைப்பந்து போட்டிக்கு மதுரை மாவட்ட அணி தேர்வு

மதுரை, ஜன. 11: மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு மதுரை மாவட்ட அணிக்கான வீரர்கள் தேர்வு நடந்தது.  மதுரை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி மதுரை திருநகரில் உள்ள சிஎஸ்ஆர் பள்ளி மைதானத்தில் நடந்தது. பள்ளிகளின் இயக்குனர்கள் கலாதர்பாபு, பூர்ணிமா ஆகியோர் துவக்கி வைத்தனர். துவக்க விழாவிற்கு கைப்பந்து சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷணன் தலைமை வகித்தார். விளையாட்டு ஆணைய பயிற்சியாளர் குமரேசன் முன்னிலை வகித்தார். பள்ளி உடற்கல்வி ஆசிரியர் குமார் உள்பட பலர் பங்கேற்றனர். மதுரை மாவட்டத்தை சேர்ந்த 8 அணிகள் போட்டியில் மோதின. இந்த போட்டியின்போது மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கான வீரர்கள் தேர்வு நடந்தது. இதில் 20 வீரர்கள் கொண்ட மதுரை மாவட்ட அணி உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

Related Stories: