அடிப்படை வசதிகள் அறவே இல்லை திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் மக்கள் புகார்

வாடிப்பட்டி, ஜன. 11: வாடிப்பட்டி ஒன்றியம் பூச்சம்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் அறவே இல்லையென திமுக சார்பில் நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்வாடிப்பட்டி ஒன்றியம் பூச்சம்பட்டி கிராமத்தில் திமுக சார்பில் கிராம ஊராட்சி சபைக் கூட்டம் தலைமைக் கழக பிரதிநிதியும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமானா சிவாஜி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் பால.ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் சேகர், ஊராட்சி செயலாளர் சீனிவாசன், முன்னாள் பேரூர் செயலாளர் பால் பாண்டியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வாடிப்பட்டி பேரூர் செயலாளர் பிரகாஷ் வரவேற்றார்.பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் சாக்கடை வசதி, மயான வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட கிடைக்கவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். அனைத்தும் ஊராட்சி சபைக் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: