தூத்துக்குடியில் வீடு புகுந்து நகைகள் திருடியவர் கைது

தூத்துக்குடி, ஜன.11:தூத்துக்குடி சின்னமணி நகரை சேர்ந்தவர் ராஜ்குமார்(27). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2ம்தேதி குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் பீரோவில் இருந்த 3 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து ராஜ்குமார் தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் எஸ்ஐ ரவிகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.இந்நிலையில் தூத்துக்குடி திரு.வி.க.நகரை சேர்ந்த செந்தூர்பாண்டி (27) என்பவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் ராஜ்குமார் வீட்டிற்குள் புகுந்து கள்ளச்சாவி போட்டு பீரோவை திறந்து நகைகள் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: