14 பெண்கள் உள்பட 171 பேர் கைது திமுக ஊராட்சி சபை கூட்டங்களில் அடிப்படை வசதி குறித்து அடுக்கடுக்கான புகார்கள் * குடிநீர் விலைக்கு வாங்குகிேறாம்

மதுரை, ஜன. 10: ‘தமிழகத்தின் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம்” என்ற முழக்கத்துடன் திமுக சார்பில், தமிழகம் முழுவதும் ஊராட்சி சபை கூட்டங்கள் நேற்று தொடங்கின. மதுரை கிழக்கு தொகுதி ஒத்தக்கடை ஊராட்சி சபை கூட்டம் ஒரு தெருவின் மரத்தடியில் நடந்தது. மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏபி.ரகுபதி வரவேற்றார். கிராம மக்கள் தரையில் அமர்ந்து சரமாரியாக கூறிய புகார் வருமாறு:குழாய்களில் 3 நாட்களுக்கு ஒரு முறை கழிவுநீருடன் குடிநீர் வருகிறது. இதனால் ரூ.20 கொடுத்து கேன் குடிநீர் வாங்குகிறோம். குப்பைகள் அள்ளப்படாமல் குவிகிறது. சாக்கடை தேங்கி கொசு உற்பத்தியாகி பரவுகிறது. தெரு விளக்குகள் சீராக எரியாமல் இருட்டில் நடமாட முடியவில்லை. இவ்வாறு கூறினர். இதன் பிறகு மூர்த்தி எம்.எல்.ஏ. பேசுகையில், ‘எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒத்தக்கடை ஊராட்சியில் போர்வெல் அமைத்து குடிநீர் கிடைக்க ரூ.20 லட்சம் வழங்கினேன். மேலும் கூடுதலாக ரூ.10 லட்சம் வழங்கப்படும். 3 ஆண்டாக பஞ்சாயத்து தேர்தலை நடத்த தவறியதால்தான் கிராம மக்களின் தேவைகள் நிறைவேறாமல் முடங்கி கிடக்கின்றன. கூடுதல் நிதி கிடைக்கவில்லை” என்றார். இதில் ஊர் முக்கிய பிரமுகர் பூபதி, திமுக ஒன்றிய துணை செயலாளர் மதிவாணன், அணி நிர்வாகிகள் பாலாண்டி, அண்ணாமலை பங்கேற்றனர்.

இதை தொடர்ந்து இரணியம் ஊராட்சி சபை கூட்டம்  மரத்தடியில் நடந்தது. மூர்த்தி எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் நேருபாண்டியன் வரவேற்றார். மாவட்ட திமுக துணை செயலாளர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் சிறைச்செல்வன் பங்கேற்றனர். இதில் அடிப்படை வசதி குறித்து புகார் தெரிவித்தனர்.கோவில்பாப்பாகுடியில் ஊராட்சி சபை கூட்டம்:மதுரை மேற்கு தொகுதி கோவில்பாப்பாகுடியில் நேற்று மாலை திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் தளபதி தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் ஜீவானந்தம் வரவேற்றார்.இதில் கிராம மக்கள் கூறிய புகார்கள் வருமாறு:-மதுரை மாநகர் எல்கையை ஒட்டிய இந்த கிராமத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு, குண்டும் குழியுமான சாலை, தெருவில் சாக்கடை ஓடி சுகாதார கேடு, தெரு விளக்கு சரியாக எரியவில்லை. அடிப்படை வசதிகள் இல்லாமல் திண்டாடுகிறோம். இந்த தொகுதி எம்.எல்.ஏ. செல்லூர் ராஜூ 2 முறை அமைச்சராக இருந்தும் அடிப்படை வசதிகளை கூட நிறைவேற்றாமல் எங்களை ஏமாற்றி விட்டார். மக்கள் அனுபவிக்கும் வேதனை அவருக்கு தெரியவில்லை. இவ்வாறு கூறினர்.கூட்டத்தில் மாநகர் மாவட்ட திமுக பொறுப்பு குழு உறுப்பினர்கள் வேலுசாமி, குழந்தைவேலு, முன்னாள் அமைச்சர் தமிழரசி, பொன்சேதுராமலிங்கம், ஜவகர், அணி நிர்வாகிகள் தனச்செல்வம், பழனிச்சாமி, கணேசன் மற்றும் கிராம பிரமுகர்கள் பங்கேற்றனர்.

Related Stories: