திருத்தங்கல் நகராட்சி பகுதிக்கு 10 நடமாடும் சுகாதார வாகனங்கள் அறிமுகம்

சிவகாசி. ஜன. 8: திருத்தங்கல் நகராட்சியில் 10 நடமாடும் சுகாதார வாகனங்களை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கொடி அசைத்து தொடக்கி வைத்தார்.திருத்தங்கல் நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் சுகாதாரமாக வைத்துக்கொள்ளும் வகையில் நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் நகராட்சியில் தினமும் குப்பைகளை தரம் பிரித்து வாங்கும் வகையில் நடமாடும் சுகாதார வாகனங்களை நகராட்சி நிர்வாகம் வாங்கியுள்ளது. பேட்டரி மூலம் இயங்கும் இந்த சுகாதார வாகனங்கள் ஒவ்வொறு வாகனமும் ரூ.1 லட்சத்து 80ஆயிரம் வீதம் 10 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேற்று கொடி அசைத்து தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ராதாகிருஷ்ணன் எம்பி, மாவட்ட கலெக்டர் சிவஞானம், நகராட்சி ஆணையாளர் சுவாமிநாதன், அதிமுக நகர செயலாளர் பொன்சக்திவேல், ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, கூட்டுறவு சங்க தலைவர்கள் ரமணப்பிரியன், அ.செல்வம், கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர்கள் ரவிச்செல்வம், சேதுராமன், கோவில்பிள்ளை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: