குடியாத்தம் அருகே பரபரப்பு : கிராமத்திற்குள் நுழைய முயன்ற யானைக்கூட்டம்

குடியாத்தம், ஜன.8: குடியாத்தம் அருகே கிராமத்திற்குள் நுழைய முயன்ற யானைக்கூட்டத்தை 3 மணி நேரம் போராடி வனத்துறையினர் காட்டிற்குள் விரட்டியடித்தனர்.கிருஷ்ணகிரியில் இருந்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப்பகுதிக்கு கடந்த மாதம் 20க்கும் மேற்பட்ட யானைக்கூட்டங்கள் குட்டியுடன் வந்தது. இந்த யானைகள் இரவு நேரங்களில் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதால் ஏற்பட்ட காயங்களுடன் வலியால் அலறி சத்தமிட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக கிருஷ்ணகிரியில் இருந்து வந்த யானைகள் குடியாத்தம் வனப்பகுதிக்கு அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் குடியாத்தம் அடுத்த தனக்கொண்டபள்ளி கிராமத்துக்குள் நுழைய முயற்சிக்கிறது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பட்டாசு வெடித்தும், மிளகாய் பொடி தூவியும் குட்டியுடன் வந்த யானைகளை விரட்டித்தனர்.இதைதொடர்ந்து நேற்றுமுன்தினம் நள்ளிரவும் அதே பகுதிக்கு யானைக்கூட்டம் வந்தது. இதையறிந்த குடியாத்தம் வனச்சரகர் ரவி தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 3 மணி நேரம் போராடி யானைகளை காட்டுக்குள் விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில் சேதமடைந்த விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், வெளியூர் யானைகளை நிரந்தரமாக விரட்டியடிக்க கூடுதலாக வனத்துறையினரை நியமிக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: