பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சிஇஓ அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகை போலீசார் பேச்சுவார்த்தை

திருச்சி, ஜன.4: பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை நேற்று இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் முற்றுகையிட்டனர். திருச்சி காஜாமியான் அரசு உதவி பெறும் பள்ளியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் வழங்கப்படும் சத்துணவு சுகாதாரமாக இல்லை என்றும், இதனை மாணவர்கள் கேட்டால் சத்துணவு பணியாளர்கள் தரக்குறைவாக பேசுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பள்ளியில் குடிநீர், கழிப்பறை வசதி உடனடியாக செய்து தர வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) சார்பில், மரக்கடையில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (சிஇஓ) அலுவலகத்தை நேற்று மாணவர்கள் முற்றுகையிட்டனர். இதில் மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.இதுபற்றி தகவலறிந்த போலீசார் அங்கு வந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அறிவுரை கூறினர். பின்னர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் மாணவர்களிடம் போன் மூலம் பேசி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Stories: