விலையில்லா கறவைமாடு வழங்கும் திட்டம் பயனாளிகளிடம் அதிகாரிகள் ஆய்வு

தா.பழூர், டிச.12: அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதியில் இலவச கறவைமாடு வழங்குவதில் அதிகாரிகள் குளறுபடி செய்வதாக ஜெயங்கொண்டம் சின்ன வளையம் கால்நடை உதவி இயக்குனர் அலுவலகத்தை பெண்கள் நேற்று முன்தினம்  முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து கால்நடை துறை கூடுதல் இயக்குனர் சந்திரசேகர் தலைமையில், மண்டல இணை இயக்குனர் விழுப்புரம் மனோகரன், மண்டல இணை இயக்குனர் அரியலூர் முகமது ஆசிப், தீவன அபிவிருத்தி இணை இயக்குனர் முருகன், கால்நடை உதவி மருத்துவர் வெற்றி வடிவேலன், வீரேந்திரன், கால் நடைகறவை மாடுகளை தேர்வு செய்யும் மருத்துவ குழுவினர் கோடாலிக ருப்பூர், இடங்கண்ணி,வாழைக்குறிச்சி ஊராட்சிகளில் சென்று பயனாளிகளை சந்தித்து அவர்கள் கோரிக்கையின் படி மாடுகள் தேர்வு செய்வதாக கூறினர். கோடாலிகருப்பூர் ஊராட்சியில் வெளிமாநிலங்களில் தேர்வு செய்வதாகவும் மற்ற இடங்கண்ணி,வாழைக்குறிச்சி ஊராட்சிகளில் அருகில் உள்ள மாவட்டங்களில் தேர்வு செய்வது எனவும் முடிவு செய்து பயனாளிகளிடம் கூறி சென்றுள்ளனர். பயனாளிகள் தினம் தினம் அதிகாரிகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விரைவில் முடித்து தர வேண்டும் என கோரிக்கை   விடுத்துள்ளனர்.

Related Stories: