நீடாமங்கலம் அருகே டாஸ்மாக் கடையில் திருட்டு

நீடாமங்கலம், டிச.12: நீடாமங்கலம் அருகே டாஸ்மாக் கடையில் மதுபானம் மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அடுத்த பச்சைகுளம் கிராமத்தில் வாழச்சேரி செல்லும் வழியில் வயல் பகுதியில் வாடகை கட்டிடத்தில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடையின் பணியாளர்கள் கடந்த 10ம் தேதி காலை சென்று பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது கடையில் 6 பெட்டியில் இருந்த 304 குவாட்டர் பாட்டில்கள், 11 புல் பாட்டில், ரூ.10ஆயிரம் ரொக்கம் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. உடனே கடையின் மேற்பார்வையாளர் பிரபாகரன் தேவங்குடி போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப் பட்டு தடையங்களை சேகரித்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மதுபானம் மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: