இந்திய பெருங்கடல், வங்க கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க நாளை வரை தடை குமரியில் 372 ஹெல்மெட் வழக்கு பதிவு

நாகர்கோவில், டிச. 11:  குமரி மாவட்டத்தில் சாலை விபத்துக்கள் அதிக அளவு நடக்கிறது. இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்வது மற்றும் மது போதையில் செல்வதால் விபத்து ஏற்படுகிறது என விசாரணையில் தெரியவந்தது. பைக்கில் ஹெல்மெட் அணியாமலும், மது போதையில் செல்பவர்கள் மீது வழக்குபதிவு செய்ய எஸ்பி நாத் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் ேபாலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமலும், மது போதையில் வாகனம் ஓட்டி வந்ததாகவும் குமரி மாவட்டம் முழுவதும் 372 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நாகர்கோவில் போலீஸ் சரக பகுதியில் 7 வழக்குகளும், குளச்சல் சரக பகுதியில் 107 வழக்குகளும், தக்கலை சரக பகுதியில் 89 வழக்குகளும், கன்னியாகுமரி சரக பகுதியில் 169 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Related Stories: