உத்தமபாளையம், ஆண்டிபட்டியில் வி.ஏ.ஓ.க்கள் உள்ளிருப்பு போராட்டம் இரவு முதல் போராட்டத்தை தொடங்கினர்

உத்தமபாளையம், டிச.6: உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.)க்கள் உள்ளிருப்பு போராட்டத்தை நேற்று இரவு முதல் தொடங்கினர். தமிழகத்தில் இ.அடங்கல் சம்பந்தப்பட்ட நிலையை மாற்றி கிராம நிர்வாக அலுவலர்களே மின்ஒப்பமிட்டு பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கும் முறையை அமல்படுத்தவேண்டும். கூடுதல் பொறுப்பு கிராமங்களுக்கு பணிக்காலம் முழுமைக்கும் கூடுதல் பொறுப்பூதியம் வழங்கவேண்டும். பங்கீட்டு ஓய்வூதியமுறைக்கு பதிலாக பழைய முறையிலான ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

அனைத்து சான்றுகளையும் பொதுமக்களை அலையவிடாமல் கிராம நிர்வாக அலுவலர்களே வழங்குவதற்கு அரசாணை வழங்கவேண்டும். இணையவழி சான்றுகளுக்கு உரிய செலவு தொகைகளை உடனடியாக வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கார்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் ராமர் முன்னிலை வகித்தார். இதில் வட்ட நிர்வாகிகள் கண்ணன், நஜீம்கான், பொருளாளர் ஆனந்த், நிர்வாகிகள் நாகராஜ், தங்கராஜ், உத்தமபாளையம் கிராமநிர்வாக அலுவலர் கவிதா உள்ளிட்ட ஏராளமான வி.ஏ.ஓ.க்கள் கலந்து கொண்டனர்.

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு நேற்று இரவு முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை தலைமையிடமாக கொண்டு கண்டமனூர், மொட்டனூத்து, ராஜதானி, மயிலாடும்பாறை ஆகிய நான்கு உள்வட்டமும், திம்மரசநாயக்கனூர் பிட் -1, பிட் -2, கோவில்பட்டி, சண்முகசுந்தரபுரம், குன்னூர், தேக்கம்பட்டி, மேகமலை உள்ளிட்ட 25 வருவாய் கிராமங்களாக செயல் பட்டு வருகிறது. இவற்றில் 18 கிராம நிர்வாக அவர்கள் பணிபுரிந்து வந்தனர். தற்போது 14 கிராம நிர்வாக அலுவலர் மட்டும் பணியில் உள்ளனர்.

இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 28ம் தேதி தமிழ்நாடு கிராம நிர்வாக மாநில அலுவலர் சங்கத்தின் சார்பாக முதல் கட்ட இணையவழி சான்றுகளை அனைத்தும் நிறுத்த வேண்டும் என்ற போராட்டத்தை துவக்கினர். அரசு செவி சாய்க்காத காரணத்தினால் இரண்டாவது கட்டமாக போராட்டமாக நேற்று இரவு ஆண்டிபட்டி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவல தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கினார். பெரியகுளத்திலிருந்து

Related Stories: