நத்தம்- மதுரை இடையே நான்கு வழிச்சாலை பணிக்காக மரங்கள், ஆக்கிரமிப்பு அகற்றம்

நத்தம், நவ. 30:  நான்கு வழிச்சாலை பணிக்காக நத்தம்-மதுரை சாலையோரத்தில் உள்ள மரங்கள், ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டன. நத்தம்-மதுரை இடையே நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதையொட்டி  நத்தம்-மதுரை நெடுஞ்சாலையோரத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான மரங்கள் டெண்டர் விடப்பட்டு அகற்றும் பணி நடந்து வருகிறது. மேலும் பரளிபுதூர் உள்ளிட்ட கிராமங்களின் சாலையோரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றப்பட்டு வருகின்றன.

இப்பணியை நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் மாசிலா மணி, தாசில்தார்கள் அருணாச்சலம், சந்திரன், திட்ட கள பொறியாளர் கோபாலகிருஷ்ணன், பரளிரூபுதூர் கிராம நிர்வாக அலுவலர் சுரேந்திரன் மற்றும் வருவாய்த்துறையினர் கண்காணித்து வருகின்றனர். பாதுகாப்பு பணியில் நத்தம் காவல்நிலைய எஸ்ஐ வேல்முருகன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: